விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நன்கொடையாளரின் கல்லூரிக்கான விஜயம்
விவேகானந்த சமுதாய அறக்கட்ளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் அதேவேளை பின்தங்கிய மற்றும் தேவைப்பாடுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை ஒன்றை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்விக்கான பங்களிப்பை முன்னெடுத்து வருகிறது.



அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து எமது பல்வேறு செயற்பாடுகளுக்கும் அனுசரணை வழங்கும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு.ரகுபதி நடராஜா அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார். எமது அறக்கட்டளையினூடாக பல்வேறு செயற்பாடுகளுக்கும் நிதி அனுசரணை வழங்கி வரும் நிலையில் 7 பாடசாலை மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை வழங்கி வருவதோடு நின்றுவிடாமல் அவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






கல்லூரிக்கான விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அவரால் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்ததுடன் அவர்களின் அடைவுமட்டங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதோடு கல்லூரியின் செயற்பாடுகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Visit of a donor of the Vivekananda Community Foundation to the college
The Vivekananda Community Foundation operates with the aim of empowering social change, while focusing on disadvantaged and needy school students and university students. Through this initiative, the foundation contributes to their education by providing them with a monthly incentive allowance.




In this regard, Mr. Ragupathy Nataraja, who resides in Australia and provides sponsorship for our various activities in collaboration with the Vivekananda Community Foundation, visited the Vivekananda College of Technology. While he has been providing financial sponsorship for various activities through our foundation, it is noteworthy that he has undertaken the responsibility of supporting seven school students by providing them with a monthly incentive allowance, and in addition, he has also been extending livelihood assistance to their families.
Following his visit to the college, he met the students he has undertaken responsibility for and discussed their levels of achievement and their future plans, and it is noteworthy that he also observed the activities of the college.


