கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் மனிதநேய நிதியம்

மனிதநேய நிதியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத் தலைவரும் வலையமைப்புப் பொறியியலாளருமான திரு.ஸ்ரீகணேசன் அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளாகங்களுக்குக் கள விஜயம் மேற்கொண்டு கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

இதன்போது கொம்மாதுறை வளாகத்தில் பயிற்றுநர்கள் மற்றும் பயிலுனர்களுடன் கலந்துரையாடிய அவர் கணினி ஆய்வுகூடத்தின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் கணினிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் ஆய்வுகூடத்தின் LAN வலையமைப்பை நவீனப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களைப் புளோரிடாவிலிருந்து அனுப்பி வைப்பதற்கும் உறுதியளித்தார்.

தொடர்ந்து கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரிக்குச் விஜயம் செய்த அவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Career Fit & IT பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை விரைவாக வழங்குவதாகத் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கும் வருகை தந்ததுடன் அங்கு நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், மனிதநேயம் நிதியத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களையும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் செயற்பாடுகளையும் பார்வையிட்டதோடு பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் செயற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Manithaneyam Trust Supports Educational Development

At the invitation of the Manithaneyam Fund, Mr. Sriganesan, President of the Florida Sri Lankan Tamil Association in the United States and a Network Engineer, visited the campuses of Vivekananda College of Technology to observe its educational and training activities.

During his visit to the Vivekananda College Of Technology, Kommadhurai, he met with trainers and trainees and inquired about the requirements of the computer laboratory. He assured that he would arrange to send the necessary equipment from Florida to address the shortage of computers and modernise the laboratory’s LAN network infrastructure. He subsequently visited Manithaneyam Community College in Karadiyanaru, where he stated that the equipment required for the newly launched Career Fit & IT training programme would be provided promptly.

He also visited Vivekananda College of Technology in Puthukkudiyiruppu. During a special discussion held there, he reviewed the projects supported by the Manithaneyam Fund and the activities of the Vivekananda Community Foundation and Vivekananda College of Technology. Discussions also covered the provision of financial assistance to university students and Advanced Level students from economically disadvantaged backgrounds.

Similar Posts