கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரிக்கு மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் களவிஜயம்
மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு.கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் அவர்களுடன் வருகை தந்த குழுவினர் கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரிக்கு களவிஜயம் மேற்கொண்டனர். இதன்போது சமுதாயக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் பார்வையிடப்பட்டதுடன் கல்லூரியின் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.






இக்கலந்துரையாடலுக்கு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அதிபர்.திரு.சந்திரசேகரம் தொழிற்பயிற்சி முகாமையாளர் உள்ளிட்ட கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் திருமதி.தனுசிகா மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் களவிஜயத்தின் போது கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.




மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான செயற்பாடுகள் கிராமப்புற இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
Manitha Neyam Trust Visits Karadiyanaru Manithanayam Community College
Mrs. Abirami Kailasapillai, Chairperson of the Manitha neyam Trust , Mr. Kailasapillai Aravindan, who visited from the United States, and their accompanying team made a field visit to the Karadiyanaru Manithanayam Community College.



During the visit, they observed the educational and vocational training activities currently being conducted at the Community College, reviewed its ongoing programmes and future plans, and engaged in discussions regarding the further development of the College.
The discussion was attended by Mr. K. Pratheeswaran, Director of Vivekananda College of Technology, Principal Mr. Chandrasekaram, the Vocational Training Manager, Mrs. Thanushika, Instructor at Karadiyanaru Manithanayam Community College, as well as the students.






During the field visit, views were also exchanged on the College’s training programmes and future opportunities for students.
These initiatives, carried out with the support of the Manithaneya Nambikkai Fund, make an important contribution to enhancing the educational and vocational skills of rural youth and creating opportunities for their future development.
