|

காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் தேவைப்பாடுடைய பிரதேசங்களை நோக்கி சமுதாயக்கல்லூரிகளை உருவாக்கி அப்பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு பயிற்சிகளை நடைமுறைப்படுத்திப்படுத்தி வருகின்றது. அந்தவகையில் காரைதீவு பிரதேசத்தில் அன்னை ஸ்ரீ சாரதா கற்றல் மேம்பாட்டு நிலைய வளாகத்தில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் CareerFit & IT நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

45 பயிலுனர்கள் தமது பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் மற்றும் மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பயிலுனர்களான வினோஜன் மற்றும் விவிதா ஆகியோர் இந்த பயிற்சி தமது வாழ்க்கையில் ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்கள் தொடர்பில் அனுபவப் பகிர்வுகளை வழங்கினர்.

விவேகானந்த தொழில்நுட்பவில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் கல்லடியின் உதவி முகாமையாளர் சுவாமி உமாதீசானந்தஜி அவர்கள் ஆசியுரை வழங்கியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். மனிதநேய நிதியத்தின் தலைவர் திருமதி. அபிராமி கயிலாசபிள்ளை மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த மனிதநேய நிதியத்தின் பொருளாளர் திரு.கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோரும் சிறப்புரையாற்றி சான்றிதழ்களையும் வழங்கினர்.

மேலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சகாதேவராஜா, மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. நடேசானந்தன், பாடசாலை அதிபர்கள் பயிற்சி நிலைய பொறுப்பாளர், விவேகானந்த தொழில்நுட்பவில் கல்லூரியின் முதல்வர், சேவையாளர்கள், பெற்றோர் மற்றும் பயிலுனர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியின் மூலம் பல மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கு முன்னரான அடிப்படை கணினி மற்றும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் உயர்கல்விக்குச் செல்ல முடியாத இளைஞர்களுக்கு அடுத்தகட்டமாக தெரிவுசெய்யக்கூடிய தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தொழில் வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. அவ்வாறே கிராமப்புற இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடுஇ உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உயர்கல்வி அல்லது தொழிற்கல்விக்குச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களைத் தயார்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Certificate Awarding Ceremony for CareerFit & IT Trainees of Vivekananda Community College

A certificate-awarding ceremony for trainees who successfully completed the CareerFit & IT programmes at the Vivekananda Community College, implemented by the Vivekananda College of Technology, was held at the premises of the Annai Sri Sarada Learning Development Centre, Karaitivu.

Following the successful completion of their training, 45 trainees were awarded certificates at a ceremony held at the Vivekananda Community College in Karaitivu. The event commenced with the lighting of the traditional oil lamp, an invocation, and a welcome dance performed by the students. Trainees Vinojan and Vivitha shared their experiences, highlighting the positive changes that the training had brought about in their lives.

The event was held under the leadership of Mr.K.Pratheeswaran, Executive Director of the Vivekananda College of Technology. Swami Umadheesanandaji, Assistant Manager of the Sri Ramakrishna Mission, Kallady, delivered the benediction and presented certificates to the students. Mrs. Abirami Kailasapillai, Chairperson of the Manitha Neyam Trust, and Mr.Kailasapillai Aravindan, Treasurer of the Manitha Neyam Trust, who had travelled from the United States, also delivered special addresses and presented certificates to the trainees.

Senior journalist and retired Assistant Director of Education Mr. Sakadevaraja, Mr. Nadesanandhan, Northern Province Coordinator of the Manitha Neyam Trust, school principals, the officer-in-charge of the training centre, the Principal of the Vivekananda College of Technology, staff members, parents, and trainees were also among those who participated in the event.

Through this training programme, many students have been provided with an opportunity to acquire basic computer and English language skills before entering university. In addition, young people who are unable to pursue higher education have been provided with career guidance on vocational training options and employment opportunities available to them as their next step.

This initiative, undertaken with the objective of enhancing the educational and vocational skills of rural youth, has served as an important preparatory programme for students during the transitional period between completing their G.C.E. Advanced Level examination and proceeding to higher education or vocational education.

Similar Posts