நன்கொடையாளர்களின் கள விஜயம்

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.திருமதி தேவி பாலச்சந்திரன் மற்றும் கனடாவைச் சேர்ந்த திருமதி.கஜேந்தி ரமேஷ் ஆகியோர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து எமது அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு செயற்பாடுகள், ஆரம்ப காலம் முதல் இன்று வரை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

எமது அறக்கட்டளையின் செயற்பாடுகள் மற்றும் கல்லூரி உள்ளடங்கலாக ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்ட நிலையில் சமூகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றிற்கு எம்மால் முடிந்த பங்களிப்பினை மேற்கொள்வது தொடர்பிலும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியமை சிறப்பானதாகும்.

கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் முதல்வர் திரு.த.சந்திரசேகரம் மற்றும் வேவையாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வரும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளின் இவ்விஜயம் எமது எதிர்கால செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


Donor Site Visit and Discussion on Education and Community Development Initiatives

Mr. and Mrs. Devi Balachandran from Australia and Mrs. Gajendhi Ramesh from Canada, who have been supporting our work through the Vivekananda Community Foundation, visited Vivekananda College of Technology. Following the visit, a detailed discussion was held about the education and community development programmes carried out by our organisations, the positive changes they have brought to the community from the beginning until today, and our future development plans.

The discussion also covered the activities of our Foundation, the College, and other affiliated organisations. Our guests shared their valuable ideas and suggestions on the needs of the community and how we can continue to contribute in the best possible way.

The meeting was chaired by Mr. K. Pratheeswaran, Executive Director of the Vivekananda Community Foundation, and was attended by Mr. T. Chandrasekaram, Principal of Vivekananda College of Technology, together with members of the staff.

The continued support of our overseas well-wishers for the education and community development activities of Vivekananda College of Technology is greatly appreciated. We are confident that this visit will further strengthen our future programmes.

Similar Posts