கரடியனாறு சமுதாயக் கல்லூரியின் பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கரடியனாறு சமுதாயக் கல்லூரியின் பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இந்து வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட சேவையாளர்களும் மேலும் கரடியனாறு இந்து வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.அகிலா நிறோஜினி தியாகராஜன் மற்றும் கரடியனாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.உதயச்சந்திரன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






வளங்கள் குறைந்த மற்றும் பின்தங்கிய பிரதேசமான கரடியனாறு பிரதேசத்தில் இருந்து வருகை தந்த பயிலுனர்கள் ஆங்கிலம் மற்றும் கணினிக் கற்கைநெறிகளின் மூலம் பெற்ற கற்றலை அடிப்படையாகக்கொண்டு வாழ்வில் தமது அடுத்த கட்டத்தை தொடர்ந்து பயணிப்பதாக தங்களது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு 50 பயிலுனர்கள் தமக்கான சான்றிதழ்களைப் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறான செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது அனுசரணையை வழங்கிக் கொண்டிருக்கும் மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றோம்.






The certificate-awarding ceremony for the trainees of the Karadiyanaru Community College
The event was conducted under the leadership of our Executive Director, Mr. K. Pratheeswaran. Mrs. Sivashankari Gangaswaran, Zonal Director of Education, Batticaloa West, graced the occasion as the Chief Guest. The Principal of Vivekananda College of Technology, along with its staff members, also participated in the event. In addition, Mrs. Akila Niroshini Thiyagarajan, Principal of Karadiyanaru Hindu Vidyalaya, and Mr. Udayachandran, Principal of Karadiyanaru Maha Vidyalaya, attended as Special Guests and added significance to the occasion.






The trainees, who came from the resource-limited and underserved area of Karadiyanaru, shared their training experiences and expressed their determination to move forward in life by building on the knowledge and skills they gained through the English and Computer courses. It is noteworthy that 50 trainees received certificates upon successful completion of their training.






We take great pride in expressing our sincere gratitude to the Manitha Neyam Trust for providing their generous sponsorship through our Vivekananda Community Foundation to support and sustain such valuable initiatives.










