மட்டக்களப்பு O/L மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் G.C.E. (O/L) மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்தை முன்னெடுக்கும் VCOT மற்றும் மனிதநேயம் நிதியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மனிதநேயம் நிதியம் (Manitha Neyam Trust) மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) ஆகியன இணைந்து, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்வி உதவித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக, ஐந்து முக்கிய பாடங்களுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பரீட்சைக்குத் தங்களைத் திட்டமிட்ட முறையில் தயார்படுத்திக்கொள்ளவும், பாடங்களின் மீதான புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், பரீட்சைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்தல் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுதல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். குறிப்பாக, பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிலும் அக்கறை செலுத்தி வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, மனிதநேயம் நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கும் இத்தகைய செயற்பாடுகள் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பங்களித்து வருகின்றது.

New Educational Initiative for O/L Students, Batticaloa

With the aim of promoting educational development in the Batticaloa District, the Manitha Neyam Trust and Vivekananda College of Technology (VCOT) have jointly launched a special educational support programme for students preparing to sit for the G.C.E. Ordinary Level (O/L) Examination.

Under this initiative, model question papers covering five key subjects have been prepared and distributed to students from the four educational zones in the Batticaloa District. This initiative provides students with an opportunity to prepare systematically for their examinations and strengthen their understanding of the respective subjects.

The main objectives of the programme are to enhance students’ academic performance, build their confidence in facing examinations, and support them in achieving better results. In particular, this initiative aims to provide additional learning and practice opportunities for students preparing for their examinations, thereby contributing to their overall academic progress.

Vivekananda College of Technology, which has consistently demonstrated its commitment not only to education and technical training but also to the educational advancement of the wider community, continues to contribute to students’ academic development and future progress through such collaborative initiatives with the Manitha Neyam Trust.

Similar Posts